யுத்த வெற்றிக்கு உழைத்த படையினரை கைவிட மாட்டேன்.

யுத்த வெற்றிக்கு உழைத்த படையினரை கைவிட மாட்டேன்.

ஒய்வு பெற்ற அல்லது சேவையிலுள்ள யுத்த வெற்றிக்கு உழைத்த படைவீரர்கள், உதவிகள் அற்றவர்களாக மாறுவதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் பலம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிங்குராங்கொடை ராஜரட்ட வித்தியாலத்தில் இடம்பெற்ற யுத்த வெற்றிவீரர்களுக்கான விருசர சிறப்பு சலுகை அட்டைகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் பாதுகாப்பு முகாம்களை அரசாங்கம் அகற்றுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் பலவீனம் காரணமாகவே சாலாவ படைமுகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததாக தலைவர் ஒருவர் கூறியுள்ளதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்துள்ளார்.

எனினும் இவ்வாறான வெடிச் சம்பவம் முதல் தடவையாக இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை விட பாரிய அளவான வெடிச் சம்பவங்கள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக்க கொலன்னே, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.பீ.பீ கித்சிறி, முப்படைகளின் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News