யாழில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சிறுமி – வளர்ப்புத் தாய் கைது
யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் சிறுமி ஒருவரை மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…
குறித்த காணொளி வெளியாகிய சில மணி நேரத்தில் சிறுமியை தாக்கியதாக கூறப்படும், சிறுமியின் வளர்ப்புத் தாயை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால், தந்தைய வேறு திருமணம் முடித்த நிலையில், அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மூர்க்க தனமாக தாக்கியுள்ளார்.
இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.