‘மொத்த பேரழிவு’ தீயினால் தரை மட்டமாகிய மீன் ஆலை.
கனடா நியுபவுன்லாந். Norman’s Cove-Long Cove ல் வியாழக்கிழமை இரவு வெடித்த ஒரு பாரிய தீயினால் அங்கிருந்த மீன் ஆலை தரைமட்டமாகியது. றினிட்டி பே எனும் சிறிய சமூகத்தை சேர்ந்த பலரின் வேலை வாய்ப்பை இந்த தீவிபத்து பாதித்துவிட்டது.
குறிப்பிட்ட மீன் ஆலையில் 700 பேர்கள் கொண்ட சிறிய ரவுனில் கிட்டத்தட்ட 240 பேர்கள் பணிபுரிந்தனர்.ஓரே இரவில் ஏற்பட்ட பாரிய தீயினால் ஆலை எரிந்து சாம்பலாகியது.
இச்சிறிய ரவுனிற்கு இது ஒரு மொத்த பேரழிவு என மீன் ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்து அங்கு பணிபுரிந்தவரான போனி நியுகுக் செய்தியாளரிடம் பேசுகையில் வெள்ளிக்கிழமை கூறினார்.
இந்த ஆலை 30வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
ஆலைக்கு அருகாமையில் இருந்த மின்மாற்றி ஒன்று வியாழக்கிழமை இரவு 9மணியளவில் தீப்பிடித்து சில நிமிடங்களில் சுவாலை கட்டிடத்திற்கூடாக பரவியதால் விபத்து ஏற்பட்டதென தலைமை தி திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 50தீயணைப்பு படையினர் இரவு பூராகவும் போராடியும் தீ தீவிரமாக இருந்ததால் ஆலையை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
f