மார்க்கம் தோன்கில் தேர்தல்களத்தில் முறுகல் நிலை

மார்க்கம் தோன்கில் தேர்தல்களத்தில் முறுகல் நிலை .

கடைசியாக கிடைத்த தகவலின்படி இரண்டு பகுதியினரும் அங்கத்தவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டபோது சுனாமியாக மாறியதாக களச்செய்திகள் தெரிவிக்கின்றன ….

2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்ராறியோ பாராளுமன்ற தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரை தெரிவுசெய்வதற்காக அங்கத்தவர்களை சேர்ப்பதில் வேட்பாளர்களின் தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர் .

இதில் “தமிழ் பேசும் பற்றிக் பிரவுன்” அமைப்பு தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கின்றது .ரூஜ்ரிவர் தேர்தலில் நடந்ததுபோல் அல்லாமல் கட்சித்தலைமையை காய் நகர்த்துவதில் மிக தெளிவாக இருக்கின்றார்கள் .

இதில் தமிழ் பேசும் பற்றிக் பிரவுன் அமைப்பு இரண்டு பிரிவாக களமிறங்கியுள்ளார்கள் .

கொன்சவேட்டிவ் கட்சியின் நீண்டகால உறுப்பினர் திரு .நிமால் விநாயகமூர்த்தி அவர்களிற்க்காகவும்,லிபரல் கட்சியில் இருந்து கொன்சவேட்டிவ் கட்சிக்கு தேர்தலிற்காக களமிறக்கப்படும் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதிக்காகவும் அங்கத்தவர்களை சேர்ப்பதில் இரண்டு பகுதியினரும் குளிரையும் பொருட்ப்படுத்தாது சூறாவளியாக வேலை செய்கின்றார்கள் .

கடைசியாக கிடைத்த தகவலின்படி இரண்டு பகுதியினரும் அங்கத்தவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டபோது சுனாமியாக மாறியதாக களச்செய்திகள் தெரிவிக்கின்றன .

எது எப்படி இருந்தாலும் தமிழ் பேசும் பற்றிக் பிரவுன் அமைப்பு பிளவுபடாமல் தமிழன் ஒருவன் மார்க்கம் தோன்கில் தொகுதியில் 2018 ல் கொன்சவேடிவ் கட்சியில் ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் போட்டியிடவேண்டும் என மார்க்கம் தோன்கில் பொதுமக்கள் விரும்புகின்றார்கள் என அறியப்படுகின்றது .

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News