போலி விசாவில் கனடா செல்ல முயற்சி :வடக்கின் நான்கு இளைஞர்கள் கைது!
போலி விசா அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி கனடாவுக்கு பயணிக்க முயற்சித்த இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த நால்வரை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இன்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர் சகோதர சகோதரிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான டி.கே 731 இலக்க விமானத்தில் பயணிக்க முயற்சித்தார்கள் என்றும் துருக்கியினூடாகவே கனடாவுக்குச் செல்ல எத்தனித்துள்ளார்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/65520.html#sthash.aIRMxys6.dpuf