போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை: ஜனாதிபதி
போர்க் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் விசாரணைகளின் போது தொழில்நுட்ப உதவி பெற்றுக் கொள்ளப்படும் எனகுறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆம் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடுகள் இன்றி பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியில் தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகளோ வாக்குறுதிகளோ அளிக்காது வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளைபெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.