பெருகி வரும் தீப்புகை நெடுஞ்சாலையில் பரவுகின்றது.
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியா வன்கூவர் புறநகர்ப்பகுதி ஒன்றில் தீயிலிருந்து புறப்படும் புகை மண்டலமானது நெடுஞ்சாலையில் பரவத்தொடங்கியதால் வீதிகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன் வர்த்தக நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன.
பேர்ன் பொக் என்ற இடத்தில் முதல் முதலாக இத்தீச்சுவாலை ஞாயிற்றுகிழமை காலை 11.40மணியளவில் அறிவிக்கப்பட்டது.
பலமான காற்றினால் தூண்டப்பட்டதால் அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தடித்த புகைமண்டலம் பெரிய அலைகளாக நெடுஞ்சாலை17ல் பரவியுள்ளது.அப்பகுதியில் அமைந்துள்ள ரில்பெரி தொழிற்சாலை பகுதி வெளியேற்றப்பட்டது.
தீயணைக்கும் பணியில் 80ற்கும் மேற்பட்ட தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.