பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் கனடா மாணவனைக் காணவில்லை

பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் கனடா மாணவனைக் காணவில்லை

நீஸ் சம்பவத்தில் எக்மன்டன் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் தேசிய நாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவர்களை கனரக வாகனம் ஒன்று மோதியதில் குறைந்தது 84 போ உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னர், குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

22 வயதான Mykhaylo (Misha) Bazelevskyy என்ற அந்த மாணவன் வணிகப் பட்டப்படிப்பை பயின்று வருவதாகவும், விநியோக முகாமைத்துவத் துறையில் நான்காம் ஆண்டு மாணவன் என்றும் MacEwan பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த மாணவன உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவர் கனடாவில் நிரந்தர வதிவுரிமை பெற்றவர் என்றும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் பிரான்சிற்கு உக்ரேன் நாட்டு கடப்பிதழில் பயணம் செய்துள்ளதாகவும், அதனாலேயே குறித்த அந்த சம்பவத்தில் கனேடியர்கள் எவைரும் காணாமல் போனதாக தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மேலும் நான்கு மாணவர்களும், பல்கலைக்கழக உறுப்பினர்களும் நீசில் இருந்ததாகவும், அவர்கள் European Innovation Academyஇன் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள பல்கலைகழக நிர்வாகம், எனினும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை காணாமல் போனதாக கூறப்படும் மாணவன் Mykhaylo என்பவர் எங்குள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News