பாகிஸ்தானில் ஒரே இரவில் 30 பேர் பலி!
பாக்கிஸ்தானின் வட பகுதியில் அமைந்துள்ள Chitral என்ற நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரே இரவில் பல வீடுகள்,மசூதி என்பன அடித்துச்
செல்லப்பட்டதாக Chitral மாவட்ட மேயர் Maghfirat Shah குறிப்பிட்டுள்ளார்.
மசூதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து தேடுதல் பணிகளை மேற்கொண்ட போது 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரழிவு நிர்வாக ஆணையத்தின் தலைவர் யூசுப் ஜியா தெரிவித்துள்ளார்.