பல பேரூந்துகள் தரிக்காமல் சென்றதால் பேரூந்தொன்றை முடக்கிய சக்கர நாற்காலி அகதி.
இச்சம்பவம் 45-கிப்லிங் பேரூந்தில் கிப்லிங் அவெனியு மற்றும் றெட்கிளிவி புளுவாட் தரிப்பில் இடம்பெற்றுள்ளது.
மொஹமட் அல்ஹஜாப்துல்லா யூலை மாதம் 5ந்திகதி தனது 10 வயது மகனை பல் வைத்திய நியமனத்திற்காக அழைத்து செல்ல போக்குவரத்து பேரூந்திற்காக காத்திருந்தார்.
ஆனால் பேரூந்துகள் தரிக்காமல் கடந்து சென்றன.தரித்தவைகளும் பயணிகள் நிறைந்திருந்ததால் இவரது சக்கர நாற்காலிக்கு இடமிருக்கவில்லை. 90நிமிடங்கள் சென்றும் வெப்பம் ஈரப்பதம் கூடிய வெப்பநிலையில் காத்திருந்து அல்ஹஜாப்துல்லா இறுதியாக நடவடிக்கையில் இறங்க தீர்மானித்தார்.
ரொறொன்ரோவின் பரபரப்பான வீதி ஒன்றில் அல்ஹஜாப்துல்லா உறுதியாக தடுப்பதை புகைப்பிடிப்பாளர் ஒருவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இரண்டு வருடங்களிற்கு முன்னர் டமஸ்கஸ் தற்கொலை குண்டு தாக்குதலில் இவரது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சக்கர நாற்காலிக்குள் முடிங்கிகிடப்பவர் இவர்.
நீண்ட நேரம் காத்திருக்க முடியாத கட்டத்தில் பேரூந்திற்கு முன்னால் செல்ல முனைந்ததாக தெரிவித்தார்.தனக்கு ஒரு தீர்வு கிடைக்குமட்டும் அகல முடியாதென தெரிவித்தார்.
10நமிடங்கள் தாமதத்தின் பின்னர் பேரூந்தில் இருந்த பயணி ஓருவர் சக்கர நாற்காலி பயன்படுத்த கூடிய வாடகை வண்டி ஒன்றை அழைத்தார்.
TTC. உடன் புகார் ஒன்றை பதிவு செய்ய அல்ஹஜாப்துல்லா திட்டமிடவில்லை.எனினும் இச்சம்பவம் குறித்து விசாரனை நடாத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தான் மௌனமாக இருந்து விட்டால் தனக்கு நடந்தது என்னவென எவருக்கும் தெரியவராது எனவும் கூறினார்.
நிலைமை சரியான முறையில் கையாளப்படவில்லை ஏன் என்பதை போக்குவரத்து கமிஷன் கண்டறிய முயல்கின்றதென TTC செய்தியாளர் பிராட் றொஸ் கூறியுள்ளார்.
பயணிகள் நிரம்பிய பேரூந்துகளில் சக்கர நாற்காலி பயணியான இவரை ஏற்ற முடியாது என்பது சரியானதே. ஆனால் இத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் கையாள வேண்டிய நடைமுறைகள் ஏன் பிரயோகிக்கப்படவில்லை என றொஸ் கேட்டுள்ளார்.
பேரூந்து நிறைந்திருந்தால் சாரதி போக்கு வரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொண்டு அடுத்து வரும் பேரூந்தில் காத்துக்கொண்டிருக்கும் சக்கர நாற்காலி பயணிக்கு இடமளிக்க முடியுமா என கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.
அடுத்து வரும் பேரூந்தும் நிரம்பியிருந்தால் சாரதி Wheel-Trans உடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் சவாரிக்கு ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் றொஸ் கூறியுள்ளார்.