நிரந்தர வதிவுரிமையை வெறுக்கும் கனடா வாசிகள்!

நிரந்தர வதிவுரிமையை வெறுக்கும் கனடா வாசிகள்!

சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான சூழல் கொண்ட நகரங்கள், சிறந்த கல்வித் தரம், உயர்வான பல்கலைக் கழகங்கள், சிறந்த நீர்வளம், …..

கனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான சூழல் கொண்ட நகரங்கள், சிறந்த கல்வித் தரம், உயர்வான பல்கலைக் கழகங்கள், சிறந்த நீர்வளம், பல்லின சமூக வாழ்க்கை, சிறந்த சுகாதார வசதி எனப் பல வகைச் சிறப்புக்களைக் கொண்டது கனடா.

கனடாவில் வசிக்க விரும்பி நாள்தோறும் உலக மக்கள் அகதிகளாகவும் குடியேறிகளாகவும் மாணவர்களாகவும் தொழில் நிமித்தமாகவும் வந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே தங்குவதற்காக நிரந்தர வதிவுரிமை (Permanent Resident) கோரி விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிப்போர் நிரந்தர வதிவுரிமை பெற்று தொடர்ச்சியாக 4 வருடங்கள் கனடாவில் வதியுமிடத்து கனேடியக் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

நிலைமை இவ்வாறு இருக்க, கனேடிய வதிவுரிமையை வேண்டாம் என்று உதறித் தள்ளுவோருக்கான செயல்திட்டம் கனேடியக் குடிவரவு குடியகல்வுப் பிரிவால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து நடைமுறையிலிருக்கும் இத்திட்டம் பிரபலமானதாக இல்லாவிட்டாலும் அதனைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 5 205 பேர் விண்ணப்பித்து 17 பேருடையது மடடுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.  இவ்வாண்டு 2016 இல் 7 378 பேர் விண்ணப்பித்ததில் 20 பேருடையது மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது. எந்தவிதக் கட்டணங்களும் தேவையற்ற இந்த நடைமுறையில் 14 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படுகிறது.

தங்களுடைய எதிர்பார்ப்பு  நிறைவேறாதவர்களும், தங்கள் சொந்த நாட்டில் ஏற்படக் கூடிய இரட்டைக் குடியுரிமைச் சிக்கல் மற்றும் வேறு காரணங்களுக்காக இவ்வாறு கனேடிய வதிவுரிமையை மீள அளிக்கிறார்கள்.

இந்த நடைமுறையில் மீள ஒப்படைக்கப்படும் வதிவாளர்கள் மீண்டும் கனடாவுக்கு வருவதற்கு வெளிநாட்டவர்கள் கனடா வருவதற்கான நடைமுறைகளின் படி விசா தேவைப்படும். ஆனாலும் அவர்கள் கனடா வருவதற்கு எந்தத் தடைகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு June  வரையான காலப் பகுதியில் நிரந்தர வதிவுரிமையை மீளக் கையளித்தோர் பட்டியலில் முதல் இடத்தைச் சீனர்களும் இரண்டாவது இடத்தை இந்தியர்களும் பெற்றுள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News