Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நினைவுபடுத்துகிறோம்: ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11

September 11, 2016
in News
0

நினைவுபடுத்துகிறோம்: ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11

கனடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஸ்காபரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் (Thomson Memorial Park) இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’ *என அழைக்கப்படவிருக்கும் நல்லின மாடுகள் வளர்க்கும் பண்ணை ஒன்றை, மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் உருவாக்க இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளுமாறு கனடியத்

தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

கொடிய போரின் இன்னல்களைத் தாண்டியபின், வாழ வழி கிட்டுமா என்று நொந்துபோய் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், போரினால் அங்கங்களை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், விதவைகள் என ஏராளமானோருக்கு ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’த் திட்டம் ஒரு ஆறுதலாக இருக்கும்.

இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளவும், கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை குறித்த விபரங்களைத் தரவும் *தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் கனடா சென்றுள்ளார்.

கனடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து அவர் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணைத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தன்னாலான முழுப் பங்களிப்பையும் வழங்குகிறார்.

புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் சீரிய திட்டமிடலுடன் ஒருமுகப்படுத்தப்பட்டு செய்யப்படும்போது பலன்கள் பெரிதாக இருக்கும்.

அவ்வகையில் கனடா தமிழர் பேரவையின் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’ தொலைநோக்குடன் நீண்ட கால பலன்தரும் வகையில் அமைகிறது.

இத்திட்டத்தின் வழி நமது வறிய மக்கள் பலன்பெறும்போது அவர்கள் நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் அப்பிரதேசங்களில் வாழக்கூடிய சந்தர்ப்பமும் உருவாகிறது.

இவ்வாறாக அவர்கள் அப்பிரதேசங்களில் குறிப்பாக எல்லைப் பிரதேசங்க ளில் வாழ்வார்களேயானால் எம் நிலங்கள் பறிபோகும் அவலம் நேராது.

இதன்மூலம் எமது நிலங்களை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

கனடிய தமிழர் பேரவை இந்த முயற்சி வெற்றி பெறும் வகையில் உங்கள் வரவையும் அங்கு எதிர்பார்க்கிறது.

கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணைத் திட்டம் குறித்து மேலதிகமாக உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அவர்களிடம் பேசித் தெரிந்து கொள்ளவும் உங்கள் வரவு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 11ஆம் திகதி கனடியத் தமிழர் நிதி சேர் நடையில் உங்களையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்திட்டத்தில் பங்காளர் ஆகி நம் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மக்களின் அவலங்களைப் போக்குபவர்களாகவும் மாறிவிடுவோம்.

Tags: Featured
Previous Post

பணி புரிய விரும்புபவர்களிற்கு இலவச நிலம் வழங்கும் வர்த்தக நிறுவனம்.

Next Post

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட3 பெண்கள்: அதிரடியாக முறியடித்த பொலிசார்

Next Post
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட3 பெண்கள்: அதிரடியாக முறியடித்த பொலிசார்

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட3 பெண்கள்: அதிரடியாக முறியடித்த பொலிசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures