தொழிலாளர் பிரச்சனை காரணமாக மிசிசாகாவில் 18நூலகங்கள் மூடப்பட்டன.
கனடா-யூலை 4ல் மிசசாகாவின் 18 பொது நூலகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கம் சார்ந்த நூலக ஊழியர்களிற்கும் நகரத்திற்கும் இடையில் ஒரு தொழிலாளர் உடன்பாடு தோல்வியடைந்ததை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசிசாகா நூலக தொழிலாளர் சங்கமான CUPE Local 1989, அதன் அங்கத்தவர்களான மிசிசாகா நூலக பணியாளர்கள் நடு இரவு 12.01 தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளது. நூலகத்தின் சகல கிளைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என நகரம் அறிவித்துள்ளது. நூலக அங்கத்தவர்கள் பொருட்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.