Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தயா மாஸ்டர் கைது!

August 11, 2016
in News
0
தயா மாஸ்டர் கைது!

தயா மாஸ்டர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் தயாநிதி சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

5 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பாலேந்திரன் சசி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

z

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்ள முன்னதாக தயா மாஸ்டர் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தயா மாஸ்டர் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டருக்கு நாளை வரை விளக்கமறியல்! வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு!

விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்று பிரபல்யம்பெற்றுள்ள வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில்பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று 10ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ஒருவழக்கில் அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம்அனுமதித்துள்ளது.

ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்குஅரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் சரீரப் பிணையாளிகளை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் எனதெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அந்தப்பிணையாளர்களை நாளை 11ம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறுஉத்தரவிட்டதுடன், அதுவரையில் இந்த வழக்கின் எதிரியாகிய தயா மாஸ்டரை வவுனியாசிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களைஇராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவிடாமல், அரச விரோதச்செயற்பாட்டாளர்களாகிய விடுதலைப் புலிகளுக்கு கேடயமாகப் பயன்படுத்துவதற்காகஅவர்களுடன் இணைந்து தடுத்ததாக தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தி வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

zzz

இந்தக் குற்றச்சாட்டிற்கு தான் சுற்றவாளி என தயா மாஸ்டர் நீதிமன்றத்தில்தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதாகநீதிமன்றம் அறிவித்துள்ளது,ஆயினும் தயா மாஸ்டர் முன்னதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில்விடப்பட்டிருப்பதைக் கவனத்திற் கொண்டு, இவரை நிபந்தனையுடன் பிணையில் செல்லஅனுமதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் வரையில் வடமாகாணத்தை விட்டு செல்லக்கூடாது.ஒவ்வொரு நாளும் யாழ் பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும்இடையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து, 5 லட்சம் ரூபாசரீரப் பிணையிலும், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப்பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆயினும், சரீரப் பிணையாளர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என்பதற்காக அவரைஅது வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

Next Post

மாயமான மலேசிய விமானம் : ஒரு வழியாக விடை கிடைத்தது

Next Post
மாயமான மலேசிய விமானம் : ஒரு வழியாக விடை கிடைத்தது

மாயமான மலேசிய விமானம் : ஒரு வழியாக விடை கிடைத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures