தமிழர்களுடன் இணைந்து பல்லின மக்கள் நடாத்திய நிகழ்ச்சியில் பற்றிக் பிறவுனை கண் கலங்க வைத்த தமிழ் முதியவர்.
கனடிய தமிழ்க கண்சவேட்டிவ் அமைப்பு ஸ்காபரோ ரூச் ரிவர் வாழ் மக்களினிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியது.
இன்று ஸ்கபரோ நகரில் அமைந்துள்ள பிருந்தன் பூங்காவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 700க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சி தொடர்பான விளக்கங்களை அறிந்து சென்றனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் முன்னேற்றவாதக் கட்சியின் தலைவரான திரு. பற்றிக் பிறவுனைச் சந்திப்பதிலேயும், திரு. பற்றிக் பிறவுனின் தெரிவை தாங்கள் விருப்பாக்குவதிலும் கொண்டுள்ள உறுதியை எடுத்தியம்பினர்.
குறிப்பாக தள்ளாத வயதிலும், இருக்கைத்துணை இயந்திர வண்டியின் உதவியுடன் தனது மகளின் கவனிப்பிலும் வந்திருந்த ஒரு முதியவர் பல நேரமாகக் காத்திருந்தார். உணவு சாப்பிடக் கேட்ட போது தான் உணவு வீட்டில் சாப்பிட்டதாகக் கூறி தான் திரு.பற்றிக் பிறவுனைச் சந்திக்கவே காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
திரு. பற்றிக் பிறவுன் வந்த பிறகு அவரை சந்தித்த அந்தத் தமிழ் முதியவர் சரளமான ஆங்கிலத்தில், “நீர் ஒரு தமிழன் கூட வாக்காளனாக இல்லாத தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 2009ல் இருந்து கொண்டு எங்கள் மக்கள் செத்த போது உமது கட்சியின் வேண்டுகோளைக் கூட செவி மடுக்காது, எங்களை வந்து சந்தித்த போதே நீர் ஒரு நேர்மையான மனிதன் என்பது எனக்குத் தெரியும்” என்று தெரிவித்ததோடு,
“தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது… காய்கிற மரம் மீது தான் கல்லெறி விழும்…. எனவே யார் என்ன சொல்கின்றார்கள் என்று பார்க்காமல் உமது கட்சிக்கு சிறந்ததைச் செய்யும், உம்மால் தான் ஒன்றாரியோவிற்கு மாற்றத்தையேற்படுத்த முடியும். தமிழர்கள் என்றால் அவர்கள் கண்சவேட்டிவ் கட்சியில் மாத்திரம் தான் அங்கத்துவர்களாக இருக்க முடியும் ஏனென்றால் கண்சவேட்டிவிற்கும் தமிழர்களிற்கும் குடும்பம் தான் முதல் முக்கியம்” எனத் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட திரு.பற்றிக் பிறவுன் கண்கலங்கினார். இதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால் இருக்கைத்துணை இயந்திர வண்டியின் உதவியுடன் வந்த அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த IPADல் திரு. பற்றிக் பிறவுனுடன் புகைப்படமெடுத்து. இதற்காகவே தான் இங்கே வந்தேன் என்று தெரிவித்து சென்றார்.
கனடியத் தமிழர் கண்சவேட்டிவ் அமைப்புடன், கனேடிய சீன கண்சவேட்டிவ் அமைப்பினரும் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் தமிழர்கள் மாத்திரமல்லாது, சீனர்கள், இந்தியர்கள், கொரியர்கள், பாகிஸ்தானியர்கள என பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் தமிழர்களில் கௌரவமான, தரமான வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதற்கான சாட்சியமாக திரு. பற்றிக் பிறவுன் அவர்கள், டாக்டர் பகிரதன் ராஜேந்திரன், திரு. ஸ்ரான் முத்துலங்கம், திருமதி.நிரோதினி பரராசசிங்கம், திரு.உமேஸ் வல்லிபுரம் போன்றோரை அவர்களது வீடுகளிற்கு தானே சென்று நேரடியாக தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டிருந்தார்,
அதன்போது, இது இடைத் தேர்தல் இதில் கட்சி வெல்லட்டும். இந்தத் தொகுதி கூட இரண்டாக இன்னமும் ஒரு வருடத்தில் பிரிக்கப்படப் போகின்றது. எனவே இந்த இடைத் தேர்தலில் இந்தத் தொகுதியை வெல்லுங்கள். 2018ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது பற்றிச் சிந்திக்கின்றோம் என மேற்படி தமிழ்ப்பிரமுகர்கள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து தனது நட்பு வட்டாரத்தில் கருத்து வெளியிட்ட திரு பற்றிக் பிறவுன் அவர்கள், தமிழர்கள் எனது நன்மதிப்புக்குரியவர்கள் என்ற வட்டத்திலிருந்து இன்னமும் ஒருபடி மேல்சென்று விட்டார்கள். எனது கட்சிக்காக எந்தப் பலாபலனுமில்லாமல் உழைக்கின்றார்கள். எனது கட்சி எதிர்காலத்திற்கான வழியைக் காட்டுகின்றார்கள். நான் நிட்சயமாகவே அவர்களிற்கு கடமைப்பட்டவன் எனத் தெரிவித்துள்ளார்.