தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க டெல்லி செல்கிறார் ஜெயலலிதா?
தமிழகத்தின் முதல்வராக 6வது முறை பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, தமிழகத்தின் தேவைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்க டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஜூன் மாதம் இரண்டாவது வாரம் இரண்டு நாள் பயணமாக ஜெயலலிதா டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்போது முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தின் தேவைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிக்கையை அவரிடம் சமர்பிக்கவுள்ளார்.
பின்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உட்பட சில முக்கிய அமைச்சர்களை நேரில் சந்தித்து குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழக மீனவர்கள் பிரச்சனை, காவேரி நதி நீர் பிரச்சனை உட்பட சில முக்கிய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டி ஜெயலலிதா வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஜெயலலிதா டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.