டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கணித்த ஆல்வின் டாஃப்லர் மரணம்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உலக அளவில் ஏற்படும் பெரும் மாற்றத்தைக் கணித்தவரான ஆல்வின் டாஃப்லர் தனது 87ஆவது வயதில் காலமானார்.
இவர் தொழில்துறை வளர்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் குருவாகக் கருதப்படுபவராகவும் அறியப்படுகின்றார்.
கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் இறந்து விட்டதாக அவரது ஆலோசனை நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
ஆல்வின் டாஃப்லர் கடந்த 1970ஆம் ஆண்டு, தனது மனைவி ஹெய்டியுடன் இணைந்து, எதிர்கால அதிர்ச்சி (Future Shock) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையில் இருந்து கம்ப்யூட்டர் சார்ந்த தகவல் பொருளாதாரத்துக்கு இந்த சமூகம் மாறும் என்பதை அதில் கணித்திருந்தார்.
அந்த மாற்றங்கள் சில நேரங்களில், மலைக்க வைப்பதாக இருந்தாலும் கூட, மனித சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று அவர் அந்த நூலில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.