Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டாகாவில் தீவிரவாத தாக்குதல்; காவல்துறை அதிகாரி பலி; பலர் சிறைபிடிப்பு

July 5, 2016
in News
0

டாகாவில் தீவிரவாத தாக்குதல்; காவல்துறை அதிகாரி பலி; பலர் சிறைபிடிப்பு

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

.இன்று (01-07-2016) வெள்ளிக்கிழமை இரவு டாகா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் பலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்துவைத்திருப்பதாக வங்கதேச சிறப்பு காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

  • சிவிலியன்களை சிறைபிடித்திருக்கும் ஆட்களிடம் தொடர்பை ஏற்படுத்த தாங்கள் முயன்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
காயம்பட்ட காவல்துறையினர்

பலர் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து காவல்துறை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எட்டு அல்லது ஒன்பது ஆண் தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை எனினும் இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடுதிக்கு அடுத்த கட்டிடத்தில் இருக்கும் பெண்மணி ரஷிலா ரஹிம் தொடர் துப்பாக்கிச்சுடும் சத்தங்களையும் கிரெனெடுகள் உள்ளிட்ட வெடிப்புக்களையும் தான் கேட்டதாகவும் சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக தன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளாகியுள்ள ஹோலி ஆர்டிசான் பேக்கரி

தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி முஹம்மத் சலாவுதீன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் குறைந்தது ஐந்து பேர் காயம்பட்டிருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாகிதாரிகள் கண்மண் தெரியாமல் சுட்டதாக தெரிவிக்கும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் “அல்லாஹூ அக்பர்” என்று கோஷம் எழுப்பியதை தாங்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டாகாவின் செல்வச்செழிப்பான பகுதியில் அமைந்திருக்கும் ஹோலி ஆர்டிசான் பேக்கரி எனப்படும் இந்த கஃபேவுக்கு வெளிநாட்டவரும் மேல் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் வருவது வாடிக்கை.

சிறப்புக்காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்

கடுமையான துப்பாக்கி சண்டை ஒலியை தாம் கேட்டதாக உள்ளூர் மக்களை ஆதாரம் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரனெடுகள் எறியப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்துள்ளதோடு அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேராவது அதில் காயமடைந்துள்ளதாகவும், அதில் இருவர் காவலர்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த பிரதேசத்தில் சிறப்புக்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்Image copyrightFOCUS BANGLA
Image captionஅந்த பிரதேசத்தில் சிறப்புக்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

இந்த சம்பவத்தின் மையமாக கருதப்படுகின்ற அந்த விடுதி, புலம்பெயர்ந்த மக்கள், இராஜ்ஜிய அதிகாரிகள், மற்றும் மத்திய தரவர்க்க மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

வங்கதேசத்தில் பெரும் துப்பாக்கி சூட்டு மோதல்கள் மிக அபூர்வமாகும். ஆனால், இஸ்லாமியவாதிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் தொடர் கொலைகளை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Tags: Featured
Previous Post

ராணுவ வீரர்களுடன் நடுவானில் மாயமான விமானம்: தேடுதல் பணியில் 100 மீட்புக்குழுவினர்

Next Post

முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம் குறித்து கண்டறிய நான் மருத்துவனல்ல!

Next Post

முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம் குறித்து கண்டறிய நான் மருத்துவனல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

June 9, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 9, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளை பாதுகாக்கமாட்டோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 9, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

June 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures