சீனாவை தாக்கிய சூப்பர் புயல் நெபர்டாக்
சீனாவின் தென்கிழக்கில் நெபர்டாக் என பெயரிடப்பட்டுள்ள சூப்பர் புயல் தாக்கியதில் ஏற்பட்ட பெரு மழையினால் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. தைவானில் பலர் பலியாகி உள்ள நிலையில் அது வலுவிழந்து வருகிறது.
சீனாவின் பியூஜியான் மாகாணத்தின் நில பகுதியினை புயல் இன்று தாக்கியதை அடுத்து ஷிசி நகரத்தில் மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பெருமளவு மழை பெய்தது. அது 250 மி.மீட்டர் அளவில் பதிவான நிலையில் அருகிலுள்ள புதியான் நகரில் 4 மணிநேரம் வரை 100க்கும் கூடுதலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நீர் நிலைகளில் நீரின் அளவு குறித்து ஆய்வு செய்வதற்காக 25 ஆயிரத்திற்கும் அதிகளவிலான மக்கள் ஆய்வு செய்து உள்ளனர்.
இந்த புயல் தைவானை கடந்தபொழுது பலவீனமடைந்து அதன்பின் சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தைவானில் குறைந்தது 3 பேர் பலியாகினர். 300க்கும் கூடுதலானோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் குறிப்பிடும்படியாக வூஹான் நகரில் கடுமையான வெள்ள பாதிப்பினை புயல் ஏற்படுத்தியுள்ள நிலையில் அது இன்னும் தீவிரமடையும் என கருதப்படுகிறது. இந்த வருடத்தின் இக்கால கட்டத்தினில் தென் சீன கடல் பகுதியில் புயல்கள் ஏற்படுவது வழக்கம் என்பதுடன் நீரில் அது வலிமை அடைந்து நில பகுதியில் வலுவினை இழந்து விடுகிறது.
சீனாவில் புயலினால் பலர் பலியாவது வழக்கம் என்ற நிலையில், அவர்களை பாதுகாப்பதற்கும் மற்றும் முன்னெச்சரிக்கையை முன்பே எடுக்கும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதனால் பலர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டில், தெற்கு தைவானில் மொராகோட் புயல் பெரிய அளவில் அழிவினை ஏற்படுத்தியது. இதனால் 700 பேர் பலியாகினர். 300 கோடி டாலர் மதிப்பில் சேதத்தினையும் ஏற்படுத்தியது.