கேம்பிரிட்ஜ் பிரபு மற்றும் சீமாட்டியார் 2016ல் கனடா விஜயம் செய்கின்றனர்.

கேம்பிரிட்ஜ் பிரபு மற்றும் சீமாட்டியார் 2016ல் கனடா விஜயம் செய்கின்றனர்.

கனடா-இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கத்தரின் இருவரும் எதிர்வரும் இலையுதிர் காலத்தில் கனடாவிற்கு அரச சுற்று பயணம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.
கனடிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இருவரும் கனடாவிற்கு அரச சுற்று பயணத்தை மேற்கொள்ள உள்ளனர் என்ற தகவலை கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்ரன் புதன்கிழமை தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இளவரசர் வில்லியம் கேற் இருவரிடமும் கனடாவருகையின் போது அவர்களது பிள்ளைகளையும் அழைத்து வருமாறு ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வருகையின் போது அழகான பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கண்ணிற்கினிய பிரதேசமான யுகொன் ஆகிய இடங்களிற்கும் இவர்களை அரச சுற்றுப்பயணம் அழைத்து செல்லும்.
இந்த வருகை தம்பதியர்களின் இரண்டாவது கனடா விஜயமாகும்.முதல் தடவையாக 2011ல் இவர்கள் தலைநகர் பிரதேசம், மொன்றியல், கியுபெக், சாளட்ரவுன், சமசைட், யெலோநைவ், சிலேவ் லேக் மற்றும் கல்கரி ஆகிய இடங்களிற்கு விஜயம் செய்தனர்.

f

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News