Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

October 20, 2016
in News, Politics
0
கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

தற்போதைய சூழலில் மிக முக்கியமான திருப்புமுனைகள் பலவற்றை இலங்கை முகம் கொடுத்து கொண்டு வருகின்றது.

அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பிலேயே அதிக கருத்துகள் அதுவும் குறிப்பாக முரண்பட்ட கருத்துகளே வெளிப்படுத்தப்படுகின்றது.

நல்லாட்சியை சிக்கலில் சிக்க வைக்க மஹிந்த தரப்பு முயன்று வருவது வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் அதன்படி கூடிய விரைவில் பிரபாகரனின் மரணம் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றும் மஹிந்த தரப்பு அதற்கான ஆயத்தங்களை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் விடுதலைப்புலிகள் தலைவரின் மரணம் என்பது தற்போது வரையிலும் மர்மமாகவே காணப்படுகின்றது.

அண்மையில் கமால் குணரத்ன ஆரம்பித்து வைத்தது முதல் விடுதலைப்புலிகளின் தலைவர்தொடர்பில் பல்வேறு பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு கொண்டு வரும் நிலையில்அவருடைய மரணம் தொடர்பில் மஹிந்த, பொன்சேகா, கோத்தபாய அனைவருமே பின்வாங்க முயலும் கருத்துகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனையும் தாண்டி தற்போது பசில் ராஜபக்ச கூறியுள்ள கருத்து பாரிய அளவு சந்தேகக் கணைகளை எழுப்பியுள்ளது. அதாவது தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் இறக்கவில்லை என்பதை வலுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பசில் முன்வைத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட வில்லை ஆனாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என பசில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசிய கட்சியுடன் நல்லாட்சி இணைந்து செயற்பட்டு வருவதால் பிரபாகரனுடைய மரண சான்றிதழ் தொடர்பில் எளிதான செயற்பாடுகளை நல்லாட்சி முன்னெடுக்க முடியும் எனவும் பசில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருந்தார்.

பிரபாகரனின் மரண சான்றிதழ் சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதும் அது தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் வெளிப்படையான கருத்துகளை இதுவரையில் முன்வைக்கவில்லை ஆனாலும் தற்போது அவர்களே பிரபாகரனின் மரண சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளமை வியக்கத்தக்கது.

தற்போது பசிலின் கருத்துகளுக்கமைய நோக்கப்படுமானால் பிரபாகரனின் மரண சான்றிதழ்முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைக்கும் கருத்தாகவே இது நோக்கப்படுகின்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது வரையிலும் வெளிப்படுத்தப்படாத இரகசியம் தற்போது வெளிப்படுத்த முயற்சி நடக்கின்றது. இதில் மஹிந்த தரப்பு நல்லாட்சியை சிக்கவைக்கும் செயலில் அல்லது இது வரையில் பொறுமைகாத்து வந்த பசில் கடந்த கால குற்றங்களை வெளிப்படுத்தி தான் தப்பிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றாரா?

அல்லது நல்லாட்சியையும் மஹிந்தவையும் சிக்க வைத்து விட்டு, ஆட்சியை தான் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபடுகின்றாரா? என்ற இருவகை சந்தேகங்கள் காணப்படுகின்றது.

தற்போது அனைவராலும் விடுதலைப்புலிகள் தலைவரின் மரணம் தொடர்பில் வெவ்வேறுகருத்துகள் முன்வைக்கப்படுகின்ற காரணத்தினால் நல்லாட்சி அவற்றிக்கு முகம் கொடுக்க வேண்டிய சிக்கலில் சிக்கியுள்ளது.

அதேபோன்று போர்க்குற்றம் தொடர்பில் சிக்கியுள்ள போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களாக கூறப்படும் மஹிந்த, கோத்தபாய போன்றோருக்கும் பாரிய தலையிடியாக இது அமையும் என்பதும் ஒரு வகையில் உண்மையே.

அத்தோடு ஏழு ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த இலங்கையின் மிகப்பெரிய இரகசியத்தை தற்போது வெளிப்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ளது .

இதனால் பிரபாகரனுக்கு மரண சான்றிதழை கொடுக்க அரசு முற்படுமா? என்பது மிகப்பெரிய வினாவாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

இங்கு போனால் திரும்பமாட்டீர்கள்-மர்மத்தீவு

Next Post

யாழ்ப்பாணம் மற்றும் கிங்ஸ்டனுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறிப்பது என்ன?

Next Post
யாழ்ப்பாணம் மற்றும் கிங்ஸ்டனுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறிப்பது என்ன?

யாழ்ப்பாணம் மற்றும் கிங்ஸ்டனுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறிப்பது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்: காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்: காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை

August 19, 2026
தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ பட அப்டேட்

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ பட அப்டேட்

August 19, 2026
இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

August 18, 2026
தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

August 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures