காரமான மிளகாய்களிற்குள் கொக்கெயினை மறைக்க முடியவில்லை?
கனடா- சரக்கு விமான அதிகாரிகளை முட்டாளர்களாக்க எண்ணி காரமான மிளகாய்கள் அடங்கிய பொதிக்குள் கிட்டத்தட்ட 20-கிலோ கிராம் கொக்கெயினை மறைக்க முயற்சித்தது தோல்வியில் முடிந்த சம்பவம் கடந்த மாத இறுதியில் ரொறொன்ரோவில் நடந்தது.
கடந்த யூன் மாதம் 23ல் சரக்கு விமான ஒன்று றினிடாட்.Port of Spainனிலிருந்து ரொறொன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பொருட்களை இறக்குவதை சரக்கு அதிகாரிகள் கவனித்தனர்.
இரண்டு பெட்டிகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர்கள் பெட்டிகளை திறந்து பார்த்த போது ஏராளமான உறைப்பு மிளகாய்கள் பெட்டிக்குள் மேலேயும் இவைகளிற்கு கீழ் கிட்டத்தட்ட 19.34கிலோகிராம்கள் எடையுள்ள 17 கொக்கெயின் கட்டிகள் இருக்க கண்டு பிடித்தனர்.
விமானத்திலிருந் மிகுதி சரக்குகள் பாதுகாப்பு வலையத்திற்கு X-ray பரிசோதனைக்காக மாற்றப்பட்டன. விமானம் முழுவதையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கொக்கெயின் ஆர்சிஎம்பியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வருடத்தில் 678-கிலோ கிராம்களிற்கும் மேலான கொக்கெயின் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லைப்புற அதிகாரிக் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான எல்லை-கடக்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் கனடா எல்லைப்புற பாதுகாப்பு பிரிவின் கட்டணமற்ற 1-888-502-9060.இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/65560.html#sthash.Draz403v.dpuf