காணாமல் போன, கொலை செய்யப்பட்ட கனடிய முதற்குடி பெண்கள் குறித்த விசாரனையை அரசாங்கம் அதிகார பூர்வமாக ஆரம்பிக்கின்றது.

காணாமல் போன, கொலை செய்யப்பட்ட கனடிய முதற்குடி பெண்கள் குறித்த விசாரனையை அரசாங்கம் அதிகார பூர்வமாக ஆரம்பிக்கின்றது.

ஒட்டாவா-மத்திய அரசாங்கம் கனடாவில் காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்த ஒரு முடிவை ஏற்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட விசாரனையை ஆரம்பிக்கின்றது.
விசாரனையின் ஆரம்பமாக பழங்குடி மரபுகள் சம்பந்தப்பட்ட விழா ஒன்று இன்று புதன்கிழமை கியுபெக்கில் அமைந்துள்ள கனடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.
சுதேச விவகார அமைச்சர் கரொலின் பெனெட், நீதி அமைச்சர் ஜூடி வில்சன்-றேபோல்ட் மற்றும் பெண்கள் அந்தஸ்து அமைச்சர் பற்றி ஹாஜ்டு நிகழ்வில் அங்கம் வகிப்பர்.
பாதிக்கப்பட்ட சில பெண்களின் குடும்பத்தவர்களையும் இவர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து ஒரு தேசிய பொது விசாரனை கோரி பல தடவைகள் திரும்ப திரும்ப மத்திய அரசிடம் கோரிய போதியதிலும் இன்றுதான் கோரிக்கை செயல்படுத்தும் வேளை வந்துள்ளதால் இன்றய நாள் மிக மிக உணர்ச்சிபூர்வமான ஒரு நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களது கோரிக்கை கொன்சவேட்டிவ் அரசாங்கத்தில் முன்னாள் பிரதம மந்திரி Stephen Harper அவர்களால் எதிர்க்கப்பட்டது—கடந்த தேர்தல் காலத்தில் லிபரல் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய திறவு கோலாக இருந்தது.
இந்த விசாரனைக்காக லிபரல் அரசாங்கதம் 40மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
1980முதல் 2012வரையிலான காலப்பகுதியில் 1,100ற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயும் கொல்லப்பட்டும் உள்ளதாக 2014 மேமாதம் ஆர்சிஎம்பியினர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
முதலாவது அறிக்கை வெளியிட்ட காலப்பகுதியில் இருந்து ஒரு வருடத்தின் பின்னர் மேலும் 32 பழங்குடி பெண்கள் கொலை செய்யப்பட்டும் 11ற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

miss

miss5

miss1miss2miss6miss7

 

 

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News