கனேடிய மக்கள் விளையாட்டுக்கழகத்தினதும்,வாழவைப்போம் அமைப்பினதும்,தாயக மக்களுக்கான உதவி!

கனேடிய மக்கள் விளையாட்டுக்கழகத்தினதும்,வாழவைப்போம் அமைப்பினதும்,தாயக மக்களுக்கான உதவி!

jj jjj jjjjj jjjjjjj jjjjjjjjj

கனேடிய வாழவைப்போம் அமைப்பினதும், கனடா மாதகல் முன்னேற்றக் கழகத்தினதும் நிதி அனுசரணையில் கனேடிய மக்கள் விளையாட்டுக்கழகத்தினரால் யுத்த காலத்தில் உடல் ரீதியாக கடும் பாதிப்புற்றவர்களுக்கான உதவிகள் தாயகத்தில் கிளிநொச்சியில் மருதநகர்ப் பகுதியில் 2016.08.04 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வரும் குடும்பத்தலைவர்கள் மூவருக்கு நல்லின பாற்பசுக்கள் வழங்கப்பட்டது.

தவிர போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பாடசாலை செல்லும் ஐந்து பிள்ளைகளுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டது.

சுமார் 350000 ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்ட இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கலந்துகொண்டு உரையாற்றினார்.

எமது மண்ணில் நடைபெற்ற உரிமைப்போராட்டத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் சக்கர நாற்காலியிலே வலம் வருகிறார்கள்.

பிரதான உழைப்பாளியாக இருக்கவேண்டிய அவர்கள் தமது மனைவிமார்களையும் குழந்தைகளையும் வாழ வைப்பதற்காக படுகின்ற துயரங்கள் ஏராளமானவை. இவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதிலே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் காட்டுகின்ற அக்கறை அதிகமானது.

பாரிய அழிவைத் தந்த அரசாங்கம் கோழிகளையும் குஞ்சுகளையும் சிறு தானியங்களையுமே உதவியாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் மக்களுடைய தேவைகள் பெரியதாக இருக்கிறது.

தாங்கள் சந்தித்த இழப்புக்களை ஈடு செய்யக்கூடிய நிவாரணங்களை பெறக்கூடிய வழிகளை நல்லாட்சி அரசும் ஏற்படுத்தவில்லை.

வடக்கு மாகாண சபைக்கும் போதியளவு நிதி ஒதுக்கப்படாதபோது இவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு எங்களுடைய புலம்பெயர் சமூகத்தின் கைகளிலே தங்கியிருக்கிறது.

அதனால்தான் இந்த பயனாளிகளுடைய நிலமைகளை உணர்ந்து கொண்டு இவர்களுடைய நிலையினை புலம்பெயர்ந்து வாழுகின்ற நல்லுள்ளங்களுக்கு தெரியப்படுத்தி இவ்வாறான உதவிகள் வழங்கப்படுகிறது.

வாழவைப்போம் அமைப்பு கனடா மாதகல் முன்னேற்றக் கழகம் என்பன இன்று மாத்திரமல்ல, இதற்கு முன்னரும் பல லட்சம் ரூபாவிற்கு உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

எனவே இவ் உதவிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் ‘உயிரிழை’ அமைப்பின் தலைவர் ஜெயகாந்தன் முன்னாள் பிரதேசசபை துணைத்தவிசாளர் நகுலேஸ்வரன் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News