கனடிய அரசு மட்டக்களப்பிற்கு உதவி

கனடிய அரசு மட்டக்களப்பிற்கு உதவி

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போதான விவகாரங்களில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுதல் போன்றவற்றில் கனடிய அரசு ஈடுபட வேண்டுமென்ற வேண்டுகோள் மே மாதம் 25ம் திகதி, மற்றும் யூன் மாதம் 06ம் திகதி விடுக்கப்பட்டிருந்தது.

கனடியத் தமிழ்க் கண்சவேட்டிவ் அமைப்பால் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோள் பிரதமரின் தலைமைத் தொடர்பாளரால் இது தொடர்பான விவகாரங்களை கவணிக்கும் அமைச்சருக்கு அனுப்பட்டு, அந்த அமைச்சர் நேரடியாகவே தனது உத்தியோகபூர்வ பதிலை மேற்படி அமைப்பிற்கு இந்த வாரம் அனுப்பியுள்ளார்.

உலகாளவிய விவகாரங்களிற்கான அமைச்சு – கனடாவிலிருந்து பதிலிருத்த அமைச்சர் கௌரவ மேரி-கிளவுட் பிபியு தாங்கள் மே மாதம் 25ம் திகதி மற்றும் யூன் மாதம் 06ம் திகதிகளில் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஆழமானவை என்றும் தாங்கள் அவற்றை கவணத்தில் எடுத்தததாகவும்,

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைகுறித்தும் அங்குள்ள குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்கள் பற்றிய தகவல்களிற்கும் நன்றி தெரிவித்ததுடன், தங்களது the Advancing Specialized Skills for Economic Transformation (ASSET) project என்ற திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நல்வாழ்வாதரத்திற்கு கனடா உதவி புரிய முனைவதாகவும் தெரிவித்த மேற்படி அமைச்சர்,

கனடியப் பிரதமர் ஈழப்போர் ஓய்ந்து ஏழாண்டுகள் நினைவாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த “எவ்வளவோ மேலதிக வேலைகளை போர்க் காயங்கள் ஆறுவதற்கும் அதனிலிருந்து விடுபடுவதற்கும் ஆற்ற வேண்டியிருக்கின்றது” என்பதை நோக்கியே தங்களின் தற்போதைய பயணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு,

இலங்கையின் மீள்நிர்மாணம், இனங்களிற்கிடையோயான நல்லிணக்க விவகாரங்களில் கனடியத் தமிழ்க் கண்சவேட்டிவ் அமைப்பு தாராளமாக தங்களுடைய தொண்டார்வப் பங்களிப்பை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கடிதம் கனடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்வதற்கு ஏதுவானதொரு சூழ்நிலையில் மேற்படி அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கனடாவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜயலேந்திரன் சதாசிவம் கனடியத் தமிழர்களிற்கு விடுத்த வேண்டுகோளையடுத்தே கனடிய தமிழ் கண்சவெட்டிவ் அமைப்பு இந்த முனைப்பை மேற்கொண்டது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News