கனடா-ஸ்காபுரோவில் வாகன விபத்தில் மோட்டார்சைக்கிள்காரர் கொல்லப்பட்டார்.
வேறொரு வாகனத்துடன் மோதியதில் மோட்டார்சைக்கிள் காரர் ஒருவர் இறந்த சம்பவம் புதன்கிழமை மாலை ஸ்காபுரோவில் நடந்துள்ளதாக ரொறொன்ரோ அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் மக்கோவான் வீதியின் சிறிது வடக்கே நெடுஞ்சாலை 401-ல் மாலை 6.30மணியளவில் நடந்தது.
பொலிசாரின் கூற்றுபிரகாரம் மோட்டார் சைக்கிள்காரர் தெரியாத காரணங்களினால் நெடுஞ்சாலை 401ற்குள் அண்மிக்கையில் சகல வடக்கு நோக்கிய பாதைகளை கடந்ததால் இடையில் காணப்பட்ட சகலவற்றையும் மோதி தெற்கு பாதைக்குள் பயணித்த போது தாக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
40வயது மதிக்கத்தக்க குறிப்பிட்ட ஆண் சாரதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றய சாரதி சம்பவ இடத்தில் இருந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை 401 பல மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டிருந்தது.