கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி கேட்க கேள்வியினால் பரபரப்பு
கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது.
கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாலியல் துஷ்பிரியோகம் தொடர்பான வழக்கிற்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது.
நீதிபதி விசாரணையின்போது பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை பாலியல் துஷ்பிரியோகம் செய்ய முயன்றபோது நீங்கள் ஏன் அதை அனுமதித்தீர்கள்? உங்கள் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து தப்பியிருக்கலாமே?
இந்த சம்பவத்தில் நபரை அனுமதித்த நீங்கள் தான் குற்றவாளி’’ என பகிரங்கமாக பேசிய நீதிபதி பாலியல் துஷ்பிரியோகம் செய்த ஸ்கொட் வால்டரை நிரபராதி எனக் கூறி விடுதலையும் செய்துள்ளார்.
பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட பெண்ணிடம் கீழ்த்தரமாக பேசிய நீதிபதி மீது பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அல்பேர்ட்டா மேல்முறையீட்டுக்கான நீதிமன்றம் கடந்தாண்டு ரோபர்ட் கேம்பின் தீர்ப்பை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் நீதிபதிகள் கவுன்சில் முன்னிலையில் ரோபின் கேம்ப் மீது விசாரணை நடைபெற்றுள்ளது.அப்போது, ‘’நான் பெரும் தவறு செய்து விட்டேன். இதற்காக அந்த இளம்பெண்ணிடமும் பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல் சிறந்த நீதிபதியாக செயல்படுவேன். சட்டத்தை பற்றியும் பாலியல் முறைபாடுகள் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதையும் நான் நன்றாக கற்றுக்கொள்கிறேன்’’ என கவுன்சில் முன்னிலையில் ரோபன் கேம்ப் பேசியுள்ளார். ஆனால், ரோபின் கேம்ப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரை தற்காலிகமாக பணியிலிருந்து கவுன்சில் நீக்கியுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/65493.html#sthash.h1KTzmxT.dpuf