கனடா-அல்பேர்ட்டா எட்மன்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வங்கி கவச வண்டி கொள்ளை.
கனடா-அல்பேர்ட்டா. எட்மன்டனில் மில்வூட் பகுதியில் இடம்பெற்ற TD Canada Trust வங்கியின் கவச கார்டா டிரக் வண்டி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இரண்டாவது நபர் தப்பி விட்டார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. தகவல் கிடைத்து அங்கு விரைந்த பொலிசார் மனிதனொருவர் வங்கியிலிருந்து ஒரு சில நூறு மீற்றர்கள் தொலைவில் தரையில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
இரண்டு சந்தேக நபர்கள் கவச டிரக் வண்டியின் காவலர்களை அணுகி அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை அடித்ததுடன் பணத்தை கோரியுள்ளனர்.
காவலர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சந்தேக நபர்களில் ஒருவர் இறந்து விட்டார்.
இரண்டாவது சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.
பணம் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது இன்னமும் தீர்மானிக்கப் படவில்லை.
இரண்டாவது சந்தேக நபர் ஆணா அல்லது பெண்ணா என்பது தெரியவரவில்லை.பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
534 total views, 534 views today
– See more at: http://www.canadamirror.com/canada/65511.html#sthash.zJDR6nam.dpuf