கனடாவில் Ransom wire திருடர்கள் யாக்கிரதை! தமிழர்களிடையே மனவழுத்த நோயாளிகளாகும் ஆண்கள்!!
கனடாவில் மிக அண்மையில் மக்களிடமிருந்து காசு பறிக்கும் ஒரு முறையாக கணணிகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டதே என்ற ஒரே செயல்முறையாகும்.
இது உங்களது கணணியை முற்றாகச் செயலிழக்க வைத்து நீங்கள் பணம் செலுத்தும் பட்சத்தில் மாத்திரம் உங்களை உங்களது கணணிச் செயற்பாடுகளைத் தொடர அனுமதிக்கும் ஒரு முறையாகும்.
இந்த முறையால் வீடுகள், தனிநபர்களின் கணணிகள் என்றல்ல, பல நிறுவனங்களின் கணணிகள் கூட முடக்கப்பட்டுள்ளதை தகவல்கள் வெளிக் கொண்டு வந்துள்ளன.
இதிலும் குறிப்பாக தமிழ் வியாபார நிறுவனங்கள், தமிழ் முதியோர்கள் போன்றோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அவர்கள் இவ்வாறான காசுபறிக்கும் மென்பொருளிலிருந்து விடுபடுவதற்காக பணத்தைச் செலுத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தோடு அண்மையிலேயே கனடாவில் இடம்பெற்ற சம்பவமொன்று எவ்வாறான நூதனமான மனிதர்கள் உளவியல் தாக்கத்திற்குள்ளாகி அவதியுறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஒரு குடும்பத்தினர் தங்களது நீண்ட நாள் நண்பரொருவரின் வீட்டு விழாவிற்குச் சென்று வந்தனர். அங்கே சந்தித்த பழைய நண்பர்கள் பலருடனும் கதைத்து விட்டு மேற்படி குடும்பத்தினர் வீடு சேர்கின்றார்கள்.
அவர்கள் வீட்டை வந்தடைந்ததும் வீட்டிற்கு வந்த பொலிசார் அவர்களிடம் உங்களுடைய கார் தாறுமாறாக ஓடியதாக ஒரு அநாமாதேயத் தொலைபேசி அழைப்பு வந்தது என்று கூறி காரை யார் ஓட்டியது என்ற ஒரு சிறு விபரத்தை மாத்திரம் கேட்டுவிட்டு தொந்தரவிற்கு மன்னிக்கவும் எனக் கூறி செல்கின்றார்கள்.
என்னவென்று அவர்கள் மேலும் விசாரித்த போது ஒன்றுமேயில்லை, நீங்கள் எதனையுமே பெரிதாக நோக்க வேண்டியதில்லை. உங்களைப் பிடிக்காத ஒருவர் விடுத்த ஒரு தொலைபேசி அழைப்புத் தான் என்றவர்கள் தகவலறியும் சட்டத்தின் கீழ் இந்த விவகாரங்களைப் பெற முடியும் என்ற விபரத்தையும் தெரிவித்து விட்டு செல்கின்றார்கள்.
மேற்படி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திநபர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கான காரணம் பொறாமையின் தாக்கம் மற்றும் தன்னம்பிக்கையற்ற நிலை என்பதோடு மேற்படி நபர் மனநோயின் தாக்கத்திற்கு உட்பட்ட ஒருவராக இருப்பதாகக் கருதப்பட்டது. அவர் தனது தகுதிக்கு மாறான ஒரு தோற்றத்தையடைவதற்காக இவ்வாறான முரன்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றார் என்பதைக் கண்டறிந்து, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வழிவகைகளை அந்தக் குடும்பத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.
எனவே ஒருவருக்கு உளநோய், மனநோயின் தாக்கம் இருந்தால் அதனை அறிபவர்கள் அதற்கான சேவைகளையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கு வழிசெய்து கொடுப்பதே இவ்வாறான நபர்களின் விடிவிற்கு உதவும். கனடாவில் அண்மையில் தமிழ் ஆண்களின் மனநிலைகருதி ஒரு சிலர் ஒரு அமைப்பை உருவாக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
கணணியை எவ்வாறு குறிவைத்து பணம் பறிக்கின்றார்களோ அதையொத்த செயற்பாடே மற்றவர்கள் மீதான பொறாமை காரணமாக தொலைபேசி அழைப்புக்களை அநாமதேயமாக மேற்கொண்டு பொய்த் தகவல்களைப் பரிமாறுவது என்ற நிலை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் சகல காவல்துறைக் கட்டமைப்புக்களிலும் பல தமிழர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் இவ்வாறான விழிப்புணர்வு நிலையை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றார்கள் என்பதும் குறிப்பித்தக்கது.