கனடாவில் வாகனங்கள் பல ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
கனடாவின் ப்ரம்டோன் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த நிலையில் அவரை விமானம் மூலமாக பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் குறித்த விபத்து நேர்ந்ததாகவும், விபத்துத் தொடர்பில் அறிந்ததையடுத்து Ornge விமான அம்பியூலன்ஸ் மற்றும் பீல் பகுதிக்கான துணை பொலிஸ் படை ஆகியன குறித்த பகுதிக்கு விரைந்ததாகவும், இதனைத் தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறான போதும், விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், காயங்களுக்கு இலக்கான இளைஞரின் நிலை மோசமாக உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.