கனடாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் 33 வது வருட நினைவு நிகழ்வு!

கனடாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் 33 வது வருட நினைவு நிகழ்வு!

கனடா: அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் இடம் பெற்ற கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வில்பல நூற்றுக்கணக்கான கனடியத் தமிழ் மக்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பொதுச்சுடர், கனடியத் தேசிய கீதம், கொடிப்பாட்டு, ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் ஆரம்பித்த இன் நிகழ்வை தொகுத்து வழங்கினர் வனிதா ராஜெந்திரம், தேவா சபாபதி, கௌரெஷ் ராசரட்ணம், அஸ்விகா குமரேசன் அவர்கள்.

இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் பின்வருமாறு:

1. Salma Zahid (சல்மா சாகிட்) – லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.

2. Lisa Raitt (லிசா றேய்ட்) – பழமை வாத கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.

3. ஜிம் கரிக்கியானிஸ் – Toronto City Councillor

4. நீதன் ஷான் – டொரொண்டோ கல்விச்சபை உறுப்பினர் (Trustee – TDSB)

5. பார்த்தி கந்தவேள் – டொரொண்டோ கல்விசபை உறுப்பினர் (Trustee – TDSB)

கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுக்குரிய தமது செய்தியை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்திருந்தனர்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் அவலங்களை பல தமிழ் கலைஞ்ஞர்கள் தமது பாட்டாலும், நடனத்தாலும் வெளிக்கொணர்ந்திருந்தனர்.

நிகழ்வின் முடிவில் இன்னிகழ்ச்சியைய் ஒருங்கமைத்திருந்த கனடியத் தமிழர் தேசிய அவையினர் ஒரு முக்கிய அரசியல் செய்தியை முன்வைத்திருந்தனர்: தொடர்ந்து அதியுச்ச வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள இனப்படுகொலையிலிருந்து எம் உறவுகளைக் காப்பாற்ற ஐநா மேற்பார்வையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அலகு நிறுவப்பட வேண்டும் என்றும், எமது மக்களுக்கு நிரந்தரமான தீர்வாக ஐநா மேற்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக ‘கருத்து கணிப்பு 2020’ என்ற பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்றும், இவ்வேலைத்திட்டம் வெற்றி பெறுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் கோரி இருந்தனர்

.jula 1

jula 2

jula 3

jula 4

jula 5

jula 6

jula 7

jula 8

jula 9

jula 10

jula 11

jula 12

jula 13

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

– See more at: http://www.canadamirror.com/canada/66627.html#sthash.gYVLoBEH.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News