கனடாவின் எதிர்கால பிரதமர் நாடாளுமன்றில்

கனடாவின் எதிர்கால பிரதமர் நாடாளுமன்றில்

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜத் சஜ்ஜனை நேரில் பார்க்க வேண்டும், நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற இரண்டு வயது சிறுமியின் ஆசையை பாதுகாப்பு அமைச்சர் நிறைவேற்றி வைத்துள்ளார். இவர்களுடைய சந்திப்பு தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சோபியா போபல்ஜன் என்னும் குறித்த இரண்டு வயது சிறுமி கனேடிய அரசியல் மீது அதீத ஆர்வம் உடையவர். அத்துடன் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜன் சஜ்ஜன் மீது அளவுக்கு மீறிய அன்பு கொண்டவர். அத்துடன் நாடாளுமன்ற அமைச்சர்களின் பெயர்களை மனப்பாடம் வைத்து கூறக்கூடியவர்.

இந்நிலையில் கனேடிய தினமான கடந்த முதலாம் திகதி ஹர்ஜத் சஜ்ஜனை சந்திக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்றும் குறித்த சிறுமி அழுதுள்ளார். இது குறித்த காணொளி வெளியாகியிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜத் சஜ்ஜன் சிறுமியை சந்திப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

அதற்கேற்ப மிகப்பெரிய அரசியல் இரசிகையான இரண்டு வயது சிறுமியை நாடாளுமன்றில் சந்திப்பதற்கு ஹர்ஜத் சஜ்ஜன் ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து தனது பேஸ்புக் தளத்தில் புகைப்படத்துடன் கருத்து பதிவு செய்துள்ள ஹர்ஜத் சஜ்ஜின், ‘ நான் என்னுடைய புதிய தோழியை இன்று சந்தித்தேன். அவள் வளர்ந்ததும் நாட்டின் பிரதமராக விரும்புகிறாள். நிச்சயம் அவள் நாட்டின் பிரதமராவாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடைய சந்திப்பில் சபாநாயகர் குறித்தும் அவருடைய பணிகள் குறித்தும் சிறுமிக்கு விளக்கமளித்த பாதுகாப்பு அமைச்சர் தன்னுடைய இருக்கையிலும் அவளை அமரச் செய்து மகிழ்ந்தார்.

இவற்றின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

canada pm

canada pm01

canada pm02

canada pm03

778 total views, 778 views today

– See more at: http://www.canadamirror.com/canada/65587.html#sthash.vFgCSXAt.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News