Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒலிம்பிக் திருவிழா பிரேசிலில் நாளை கோலாகல தொடக்கம்

August 5, 2016
in News, Sports
0
ஒலிம்பிக் திருவிழா பிரேசிலில் நாளை கோலாகல தொடக்கம்

ஒலிம்பிக் திருவிழா பிரேசிலில் நாளை கோலாகல தொடக்கம்

o oo oooooஉலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது.

நாளை தொடங்கும் இந்தப் போட்டிகள் 21ம் திகதி வரை திருவிழாவாக நடக்கவுள்ளது

இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 11,178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ரியோ டீ ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் தான் தொடக்க விழா நடைபெறுகிறது. அங்கு 78,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து விழாவை பார்க்க முடியும்.

தொடக்க விழாவில் பல்வேறு நாட்டின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவினை உலகம் முழுவதும் இருந்து 90 கோடி மக்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அந்த மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் அணிவகுப்பில் கிரீஸ் நாடு முதலாவதாக அணிவகுக்கிறது. அதே சமயம் ஒலிம்பிக்கை நடத்தும் பிரேசில் கடைசி நாடாக அணிவகுப்பில் பங்கேற்கிறது.

200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக்கில் மிக நீண்ட நேரம் அணி வகுப்பு நடைபெறவுள்ளது. குறிப்பிடும்படியாக, இந்த ஒலிம்பிக்கில் அகதிகள் அணியும் பங்கேற்கிறது.

நாடுகளின் அணிவகுப்பு, அனைத்து நாடுகளின் கொடிகளை ஏற்றுதல், ஒலிம்பிக் தீப ஜோதியை ஏற்றுதல் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன.

பிரேசில் மொடல் அழகியும், முன்னாள் விக்டோரியா சீக்ரட் மொடலுமான கிஸெலெ புஞ்செனின்(Gisele Bundche) நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.

மேலும், திருநங்கை மொடல் அழகியான லியா டீ (Lea T) நடத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தவிர, ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகியான அனிட்டாவின் ( Anitta) நிகழ்ச்சியும் உள்ளது.

ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 வயதான கால்பந்து ஜாம்பவான் பீலே, மூன்று உலகக்கிண்ணங்களை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

ரியோ ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்த கனடாவின் பெக்கி!

Next Post

அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

Next Post
அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures