இந்த பொங்கலுக்கு விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீஸ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தன்னுடைய 60வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளும் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அநேகமாக படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்துவரும் இந்த படமும் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரயிருக்கிறது. சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் இருப்பதாலும் இந்த படம் தமிழில் டப் ஆகவும் வாய்ப்புள்ளது.
ஒரே நாளில் விஜய் படமும், விஜய்யின் ரீமேக் படமும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
advertisement