இந்தியாவில் நாளை ரமலான் கிடையாது, விடுமுறையும் கிடையாது!
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை வரும் வியாழக்கிழமை தான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு நாளை விடுமுறை இல்லை.
தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை வேலை நாள் எனவும், வியாழக்கிழமை தான் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் நோன்பு இன்றுடன் நிறைவடைவதால் நேற்று (திங்கட்கிழமை) ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தோன்றவில்லை.
மேலும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த பிறை தோன்றுவதை பொறுத்தே கொண்டாடப்படும் திகதி மாறுபடும்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா, மற்றும் பாகிஸ்தானில் ஒரே நாளில் பிறை தோன்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.