அரச தம்பதியர்களையும் பிள்ளைகளையும் கனடாவிற்கு அழைத்துள்ளார் ட்ரூடோ.
ஒட்டாவா-டியுக் மற்றும் கேம்பிரிட்ஜ் டச்சர்ஸ் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு முறை கனடா வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அவர்களது பிள்ளைகள் பிரின்ஸ் ஜோர்ஜ் பிரின்சஸ் சாளர்ட் ஆகியவர்களும் இவர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது.
கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ எப்பொழுதேனும் அவர்களிற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கனடா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.