Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரச்சினைகளைக் கடந்து வெளியாகி உள்ளது ‘சங்கத்தமிழன்

November 18, 2019
in Cinema
0

ஒரு வழியாகப் பிரச்சினைகளைக் கடந்து வெளியாகி உள்ளது ‘சங்கத்தமிழன்’. அதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சேதுபதி நடித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இப்படத்தில் நாசர், சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்ளை ஏற்றுள்ளனர்.

விவேக் மெர்வின் இசையமைக்க, விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அச்சமயம் படப்பிடிப்பே முழுமையடையவில்லை என்றும் நவம்பர் இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வந்தன.

‘சங்கத்தமிழன்’ தமிழக வெளயீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, நெல்லை என தனித்தனியாக விநியோக உரிமையை விற்றது அந்நிறுவனம். மேலும் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது. எனினும் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில்  திடீர் சிக்கல் முளைத்தது.

‘சங்கத் தமிழ’னைத் தயாரித்துள்ள விஜயா புரொடக்‌ஷன்தான் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை தயாரித்தது. அப்படத்தை வெளியிட்ட வகையில், சில விநியோகஸ்தர்களுக்கு விஜயா நிறுவனம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாம். இதேபோல் படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி இருந்ததாம்.

இதுபோன்ற விவகாரங்களால் படத்தின் வெளியீட்டிற்குக் கடைசி நேரத்தில் தடை ஏற்பட்டது. சற்றேறக்குறைய 5 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் நிலவிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ‘சங்கத்தமிழன்’ விநியோக உரிமையைப் பெற்ற லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகர்.

இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து படம் வெளியானது. இதையடுத்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பல்வேறு அவமானங்களைத் தாங்கிக்கொண்டு ‘சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.

“கிட்டத்தட்ட 48 மணி நேரம், பல பொய் குற்றச்சாட்டுகள், பல பொய்யான தகவல்கள் என் மீதும், என் லிப்ரா நிறுவனம் மீதும் சுமத்தப்பட்டன.

“இவை அனைத்துக்கும் பதிலும் உண்மையும் தெரிந்தும், எதையும் பேசாமல், எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல், எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, விஜயா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கு  நான் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற, பிரமாண்ட முறையில் விளம்பரப்படுத்தி 350க்கும் மேற்பட்டத் திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளோம்,” என ரவீந்தர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் பல்வேறு இடைஞ்சல்கள், கேலிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எது நடந்தாலும் தனது நிறுவனம் கொண்டுள்ள கொள்கை, கருத்து மாறாது எனக் கூறியுள்ளார்.

“ஒருவர் மீது எளிதாகக் குற்றம் சுமத்தி, கேலி செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவர்களுக்கான பதிலை காலம் நின்று சொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் எங்களுக்கு உள்ளது.

“எங்களு டைய ஒரே நோக்கம், எடுத்த வேலைகளைச் சரியாகவும் ஒழுங்காகவும் செய்து, அவற் றைச் சரியான இடத்துக்குக் கொண்டு செல்வது மட்டுமே.

“அதை எப்போதும் லிப்ரா செய்து கொண்டு தான் இருக்கும்,” எனவும் ரவீந்தர் சந்திரசேகரன்  தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post

இயக்குநர்களின் பாராட்டை பெற்ற ‘வி-1’

Next Post

நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் புகார்

Next Post

நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures