தமிழில் ‛போடா போடி’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்கிய ‛நானும் ரவுடிதான்’ என்கிற படம் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அந்தப்படத்தில் இணைந்து பணியாற்றியபோது அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு நட்பு உருவாகி, தற்போது வரை அறிவிக்கப்படாத காதலாக தொடர்ந்து வருகிறது. இருவரும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் இணைந்தே பயணித்து பங்கேற்று வருகிறார்கள்.
லேட்டஸ்டாக விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தநிலையில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. இதில் அனிருத், அட்லீ, ப்ரியா அட்லீ, திவ்யதர்ஷனி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்களுக்கு நடுவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கருப்பு நிற உடையில் அட்டகாசமாக உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

