பேட்ட படத்தை அடுத்து தனுஷின் படத்தை இயக்க தயாராகி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். தற்போது, இந்தப் படத்தின் பணிகளுக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் குழுவுடன் லண்டன் சென்றிருப்பதாகத் தெரிகிறது.
எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் புரமோஷன் வேலைகளில் இருக்கும் தனுஷ், சில நாட்களில் அந்த வேலைகளை முடித்து விட்டு, நேராக லண்டன் செல்கிறார். அங்கு, 45 நாட்கள் தங்கியிருந்து, ஒரே கட்டமாக படபிடிப்பை முடித்து இந்தியா திரும்ப திட்டமிட்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் அல்பசீனோவை நடிக்க வைக்கவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

