அரசியலை விட்டு முற்றிலுமாக விலகி மீண்டும் முழுநேர நடிகராகியிருக்கிறார் சிரஞ்சீவி. கைதி நம்பர் 150ல் தொடங்கி தற்போது சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடித்துள்ளார். சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இதையடுத்து, கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மீண்டும் கமர்சியல் கதையில் நடிக்கும் சிரஞ்சீவி, தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறுகிறார். இதற்காக கடந்த ஒரு மாதமாக தீவிர உடற் பயிற்சி எடுத்து வருகிறார்.
63 வயதாகும் சிரஞ்சீவி, கதாபாத்திரத்திற்காக இவ்வளவு மெனக்கெடுவது டோலிவுட்டில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

