எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தமிழ்வாணன் இயக்கி வரும் உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் முதன்முறையாக தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். தமிழ், ஹிந்தியில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போட்டோக்களை அமிதாப் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிட்ட ஒரு போட்டோவில், சிவாஜி கணேசனின் போட்டோ சுவரில் மாட்டியிருக்க, அதன் அருகே அமிதாப்பும், எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கின்றனர்.
கூடவே, “சிவாஜிகணேசன் என்ற தலைவனின் நிழலில் இரண்டு சீடர்கள் நானும். எஸ்.ஜே.சூர்யாவும். சிவாஜி, தமிழ் சினிமாவின் பழம்பெரும் அடையாளம். அவரது புகைப்படம் இந்த சுவருக்கு அழகு சேர்க்கிறது. அவர் வியத்தகு திறமை கொண்டவர். அவருக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள் என்று பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.

