அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் அவரது மனைவி வேடத்தில் நடித்துள்ளார் வித்யாபாலன். இந்த படத்தில் நடிக்க வைக்க அவரிடம் பேசி வந்தபோது, ஹிந்தி பிங்க் படத்தில் அமிதாப்பச்சனின் மனைவியாக நடித்தவரின் வேடம் மிகச்சிறியது. அதனால் இந்த வேடத்தில் வித்யாபாலன் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது.
ஆனபோதும் தற்போது அந்த வேடத்தில் வித்யாபாலனே நடித்துள்ளார். அந்த வகையில், அஜித் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராமில் நேர்கொண்ட பார்வை குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், தயாரிப்பாளர் போனிகபூருக்கு வாழ்த்து கூறியுள்ள அவர், நேர்கொண்ட பார்வையில் என்னுடைய வேலைகளை முடித்து விட்டேன். எனக்கு சிறிய வேடம்தான், என்றாலும் என்னைப் பொறுத்தவரை அது சிறப்பான வேடம் என்று பதிவிட்டுள்ளார் வித்யாபாலன்.

