திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த வாரம் வெளியானது. அப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. இப்படியொரு வேடத்தில் எந்த முன்னணி நடிகைகளும் நடிக்க மாட்டார்கள் என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இப்படியான நிலையில், சமந்தாவை டுவிட்டரில் தொடர்பு கொண்ட ஒரு ரசிகர், சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து விட்டீர்கள். இது உங்கள் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். நீங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
சமந்தாவிற்கு அந்த ரசிகர் தன்னை உண்மையிலேயே பாராட்டுகிறாரா? இல்லை கலாய்க்கிறாரா? என்று புரியவில்லை. அதனால், ஹா ஹா… நீங்கள் என்னை பாராட்டுகிறீர்களா அல்லது இன்சல்ட் செய்கிறீர்களா என்பதே எனக்கு புரியவில்லை என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.

