‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. அடுத்து ‘கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக ‘காப்பான்’ படத்தில் நடிக்கும் போது, அந்தப் படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஆர்யாவுடன், படப்பிடிப்பு சமயத்தில் அவர்களுக்குள் காதல் வந்தது.
அதைத் தொடர்ந்து மேலும் தாமதிக்காமல் சீக்கிரத்திலேயே திருமணம் செய்து கொண்டனர். மார்ச் 10ம் தேதி இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்றனர்.

