சிபிராஜ் நடித்த நாணயம், நாய்கள் ஜாக்கிரதை மற்றும் ஜெயம்ரவி நடித்த மிருதன், டிக் டிக் டிக், படங்களை இயக்கியவர் சக்தி செளந்தரராஜன். இவர் அடுத்தபடியாக ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இதற்கு முன்பு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கஜினிகாந்த் படத்தில் சாயிஷாவுடன் இணைந்து நடித்தார் ஆர்யா. அந்த படத்தில் நடிக்கும்போதுதான் அவர்களுக்கிடையே காதல் உருவானது. மேலும், சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடை பெற்று வருகிறது.

