சின்னத்திரை சேனல்களில் நடனம், மற்றும் பாடலை மையமாக கொண்ட நிகழ்ச்சிகள் வெற்றி பெற்று விடுகிறது. இதனால் சேனல்களும் அதுமாதிரியான நிகழ்ச்சிக்கு முக்கியத்தும் கொடுப்பதுடன், அதில் புதுமையாக எதையாவது செய்து பார்வையாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது.
அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனல் சிங்கிங்ஸ்டார் என்ற புதிய பாடல் நிகழ்ச்சியை தொடங்குகிறது. இதுஒரே உணர்வை கொண்ட பாடலை இருவர் பாடும் நிகழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சி, துன்பம் எந்த உணர்வையும் அது வெளிப்படுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள். இந்த நிகழ்ச்சிக்கான அடிசனும், கஜா மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், சுனாமி பாதித்த பகுதிகளிலிருந்து தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் டீசரில் ஒரு மீனவரின் மகள் பாடும் பாடல் வைரலாகி இருக்கிறது.
நிகழ்ச்சி வருகிற மார்ச் 16ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வெறும் பாடல் போட்டி நிகழ்ச்சியாக இல்லாமல் பாடுகிறவர்களின் பின்னணியையும் படம் பிடித்து காட்டுகிறார்கள்.

