சமீபத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒளிப்பதிவாளராக இருந்த இயக்குனர் பிரேம்குமார் இந்தப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக மாறியுள்ளார்.
அழகான காதல் கதையாக, எந்த மொழிக்கும் பொருந்தும் கதையமைப்புடன் உருவாகி இருந்த இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நானி-சமந்தா இருவரும் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
சமந்தாவிடம் இது பற்றி சமீபத்தில் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் தான் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தான் நடிக்கவில்லை என கூறியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தப்படமே ரீமேக் ஆக வாய்ப்பில்லை என அதிரடியாக கூறியுள்ளார் சமந்தா.