மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் நடித்துள்ள, செக்கச் சிவந்த வானம் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய சிம்பு, ‘மணிரத்னத்திற்கு நன்றி சொல்லவே, நான் இந்த மேடை ஏறினேன். இந்த படம் குறித்து நிறைய பேசுவேன்; ஆனால் இப்போது இல்லை. படம் பேசிய பின், நான் பேசுவேன்’, என ஓடோடி சென்று அமர்ந்து கொண்டார்.