துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர்.
அரசியல் கலந்த கதையில் உருவாகி வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அக்., 2-ம் தேதி சர்கார் பாடல் வெளியாவாக இருப்பதாக படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படம் வெளியாக இருக்கிறது.

