இரும்புத்திரை வெற்றியைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஷால். லிங்குசாமி இயக்கி வரும் இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
‘சண்டக்கோழி 2’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சில தினங்களுக்கு முன் முடிவுற்றது. இந்நிலையில், படக்குழுவில் பணியாற்றிய 150 கலைஞர்களுக்கு விஷாலும், லிங்குசாமியும் தனித்தனியே தங்க நாணயம் பரிசளித்து, விருந்தளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
மேலும் இயக்குநர் லிங்குசாமி, மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை அளித்தார்.

